
விபரம் புரியதவர் கைகளில்
விபரீதம் தரும் ஆயுதங்கள்
விபரிக்க முயன்றால்
விரோதியாக்குவர் நம்மை பரவாயில்லை
விடுதலைக்கு ஏந்திய ஆயுதம்
விளைநிலங்களாகிய பெண்களையல்லவா
விதவைகள் ஆக்கியது இன்று
விந்தையான போராட்டம்
விதவைகள் அநாதைகளாக தெருவில்..
வியர்வை சிந்தா மனிதர்களினால்
விதவைகள் பல்லாயிரம்– -இன்று
விவசாயம்தரும் எங்கள் தேசத்தில்
விரயமான குருதிமண்ணில்
விடைகள் ஏதும் இல்லை– மண்ணை
விட்டு விட்டு ஓடிய சுயவாதிகளின்
வீராப்பு கொண்ட எண்ணங்களினால்
விதவைகள் என்னும் ஆயிரமாயிரம்..
விபரீதம் தரும் ஆயுதங்கள்
விபரிக்க முயன்றால்
விரோதியாக்குவர் நம்மை பரவாயில்லை
விடுதலைக்கு ஏந்திய ஆயுதம்
விளைநிலங்களாகிய பெண்களையல்லவா
விதவைகள் ஆக்கியது இன்று
விந்தையான போராட்டம்
விதவைகள் அநாதைகளாக தெருவில்..
வியர்வை சிந்தா மனிதர்களினால்
விதவைகள் பல்லாயிரம்– -இன்று
விவசாயம்தரும் எங்கள் தேசத்தில்
விரயமான குருதிமண்ணில்
விடைகள் ஏதும் இல்லை– மண்ணை
விட்டு விட்டு ஓடிய சுயவாதிகளின்
வீராப்பு கொண்ட எண்ணங்களினால்
விதவைகள் என்னும் ஆயிரமாயிரம்..












