KAVITHAI

KAVITHAISocialTwist Tell-a-Friend
நிலவின் காமம்



அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்குட்டிகள் எ‌‌ன்ற நூ‌லி‌ல் வெ‌ளியான க‌விதை‌யி‌ல் ஒ‌ன்று..

மோதி ஆர்ப்பரிக்கும் அலைகளால்
கடலின் நெடிய தனிமை
குறைவதாயில்லை...
கடல் கருணை செய்த
சிறு மணல்கரை வெளியில்
இரு நாய்க்குட்டிகள்
செல்லமாய்க் கடித்துப்புரண்டு
சண்டையிட்டுக் கொண்டன.
மீந்த கரையை
மூன்று பாத
முத்திரையிட்டு நிரப்பி
விளையாட்டாய்
ஒரு வட்டச்சுற்றைக்
காலடிகளால் வரைந்து
மீளாப்புதிர் வழியில்
கடல் முன் சிறைபிடிக்கப்பட்டது
இரண்டு நாய்கள்
என்பதில் நிச்சயமுமில்லை.

நன்றி
நூல் : அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்குட்டிகள்
வெளியீடு : குருத்து
 
Animal Text Generator at TextSpace.net நன்றி மக்கா'ஸ் THANK U! மறுக்கா வாங்க COME AGAIN!