
இன்று வழக்கதை விட அலைகள் அதிகமாய் இருக்கிறன.
இருக்காதா பின்ன வந்திருப்பது நீ அல்லவா.
பார் உன் கால் நனைக்காத அலைகள் கண்ணீர் விட்டு கொண்டே
கடலில் குதித்து தற்கொலை செய்வதை .
தென்னை மரம் கூட மறு பக்கம் வளைந்து
உன்னை பார்க்க முயலுகிறது .
காற்று கூட இன்னும் ஓசையினை ஏற்றி கொண்டு
அதிகமாய் வீசுகிறது .
உன் கால் செருப்புடன் கடல் மண் சண்டை இட்டு கொள்ளுகிறது .
தயவு செய்து செருப்பை கழட்டி விடு !
மண் பாவ விமோசனம் பெறட்டும் .
தயவு செய்து பலூன் பையனின் பலூன்களை பார்க்காதே
உன் பார்வையில் நானே உடைந்து போய் கிடக்கிறேன்.
பாவம் பலூன்கள் வெடித்து விட போகின்றன .
ஒரு முறை கடலில் உன் காலை கழுவி விட்டு வா.
இல்லா விடின் மீண்டும் சுனாமியாய்
கடல் நீர் உன்னை தேடி வரும் .
முத்து ஒன்று சிப்பி பொறுக்குவதை
இன்றுதான் நான் பார்கிறேன் .
போதும் போதும் வா வீட்டுக்கு போய் விடுவோம்
கடல் கன்னி ஒன்று வந்திருப்பதாய்
யாரோ சொல்ல உன்னை பார்க்க கூட்டம்
கூட போகிறது












